Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை

வைகாசி 9, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி

மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து அவதானம் செலுத்தி திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியாமல் போவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய குடிநீர், சமூக நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத் திட்டங்களின் தற்போதைய நிலைமை, வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் மற்றும் தேவைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக தொடர்புடைய அதிகாரிகளுடன்   ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

குறித்த திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவை ஆரம்பிக்கப்படக்கூடிய திகதி, தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவை நிறைவடையும் திகதி குறித்த அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன்போது எக்காரணம் கொண்டும் நிதிப் பிரச்சினையை ஒரு தடையாகக் கருத வேண்டாம் எனவும், திட்டங்களைத் தயாரித்து அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்த கோரிக்கைகளை முன்வைக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

மேலும், இத்திட்டங்களைச் செயல்படுத்தும்போது வெளிநாட்டுப் கடன்களுக்காகக் காத்திருக்காமல், முடிந்தவரை உள்நாட்டு நிதியைக் கொண்டு அவற்றை நிறைவு செய்வதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, திட்டங்களைத் தயாரிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களைப் பணியமர்த்திக் கொள்ளுமாறும்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார்

முந்தைய செய்தி

வியட்நாம் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

அடுத்த செய்தி

இன்று முதல் மீண்டும் மின்கட்டணம் அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்

கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்

புரட்டாதி 29, 2026
ரேணுக பெரேரா பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

ரேணுக பெரேரா பிணையில் விடுதலை

புரட்டாதி 29, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

புரட்டாதி 29, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
அடுத்த செய்தி
டிசெம்பரில் மின் கட்டணம் குறையுமா?

இன்று முதல் மீண்டும் மின்கட்டணம் அதிகரிப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check