தென் சூடானில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விமானம் புறப்பட்டு 30 நிமிடங்களில் அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் விமானி மற்றும் 13 பயணிகளும் உள்ளடங்குவதாகவும், 12 பேர் சூடான் பிரஜைகளெனவும் , இருவர் கென்ய பிரஜைகளெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை 2011ம் ஆண்டின் பின்னர், சூடானில் 55 ற்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.









