ஐபீஎல் கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் சுப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணி வெற்றியை பதிவுசெய்தது. நேற்று இடம்பெற்ற 38வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னொவ் சூப்பர் ஜயன்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னொவ் சூப்பர் ஜயன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் ரிங்கு சிங் 83 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் 156 ஓட்டங்களை வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய லக்னொவ் சூப்பர் ஜயன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்று, போட்டியை சமன் செய்தது.
அதனடிப்படையில் சூப்பர் ஓவரில் போட்டியின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய லக்னொவ் அணி ஒரு ஓட்டத்திற்குள் 2 விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்நிலையில் 2 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றியை அடைந்த கொல்கத்தா அணி, வெற்றியை தமதாக்கிறது.








