ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படை அறிவித்துள்ளது.
ஈரானிய கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் வரை, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்குமென ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
முன்னதாக கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பாதையையும் மூடுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தத் தடையை மீறும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்படும் என்று கடற்படை எச்சரித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்கா ஈரானிய கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்கவில்லை.
எனவே முற்றுகை நீக்கப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முரண்பட்ட அறிக்கைகள் காரணமாக, ஈரானிய அரசாங்கம் அமெரிக்காவை ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகக் கருதவில்லை என்று ஈரானியப் பேராசிரியர் முஸ்தபா கோஷ்ஷெஷ்ம் தெரிவித்துள்ளார்.









