நேற்று இரவு (15) எஹெலியகொட நகரில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்கள் மீது மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது குறித்த கார் மோட்டார் சைக்கிள், மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









