சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டுவரமுற்பட்ட சீனப் பிரஜைகள் 06 பேர் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (16) அதிகாலை மூன்று வெவ்வேறு விமானங்களின் ஊடாக நாட்டை வந்தடைந்த குறித்த சீனப் பிரஜைகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்டபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனப் பிரஜைகளின் பயணப் பொதிகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 75,900 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில் அவற்றின் பெறுமதி ஒரு கோடியே 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









