உலகப் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தனது 92ஆவது வயதில் காலமானார்.
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதயப் பிரச்சனை மற்றும் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இவர் தமிழ், மலையாளம்,ஹிந்தி ,பெங்காலி,தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கிட்டதட்ட 12,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
உலக புகழ்பெற்ற பாடகியான ஆஷா போஸ்லே. கடந்த 1951ஆம் ஆண்டு பின்னணி பாடகியாக அறிமுகமானமை குறிப்பிடத்தக்கது.









