Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ADB ஒத்துழைப்பு

பங்குனி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்  இலங்கை வருகை

மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை பாராட்டுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை,  480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர்,  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ‘தித்வா’ அனர்த்த நிலைக்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பேரிடருக்குப் பிந்தைய நிலைமை மற்றும் தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும், ‘தித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘தித்வா’ சூறாவளி அனர்த்த நிலைமையின் போது ஆசிய அபிவிருத்தி வங்கி இதுவரை வழங்கிய உதவிகளையும், இலங்கையுடன் பேணிவரும் விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்பையும் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமாகப் பேணி பொருளாதார அபிவிருத்தியை எட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் கண்டு கொள்ள தமக்கு வாய்ப்புக் கிடைத்ததாக இதன்போது குறிப்பிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், மத்திய மலைநாட்டின் நீர் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, மீண்டும் இத்தகையதொரு நிலைமை ஏற்படாதிருக்கத் தேவையான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்

முந்தைய செய்தி

அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி இடம்பெறும்

அடுத்த செய்தி

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
கொழும்புக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம்

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check