அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை, இனிமேல் ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சுகாதாரத்துறையினர் அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
எரிசக்தி முகாமைத்துவத்தை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் நோயாளர்களுக்கு ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்படின் வழமை போன்று கிளினிக்குகளுக்கு செல்ல முடியும் .
நாட்டில் எரிசக்தி நெருக்கடி காரணமாக பல்வேறு சவால்கள் எழுந்துள்ள போதிலும், வைத்தியசாலைகளின் அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார்.









