லாப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏறகனவே 4,330 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 4,630 ரூபாவாகும்.
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையானது 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஏற்கனவே 1,742 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 1,862 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது









