இஸ்ரேல் மீது நடத்தப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இடங்களை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இத்தகைய வீடியோ காட்சிகள் எதிரி நாடுகளுக்கு ராணுவ ரீதியான உளவுத் தகவல்களை வழங்கக்கூடும் என்பதால்இ இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி வீடியோக்களை பதிவிடுபவர்கள் மற்றும் தாக்குதல் நடந்த இடங்களின் நேரலை காட்சிகளை பரப்புபவர்கள் மீது அவசரக்கால சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் ராணுவ தணிக்கை பிரிவு எச்சரித்துள்ளது.









