பரிசுத்தப் பாப்பரசர் 14 ம் லியோ அவர்களுக்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வத்திக்கானில வைத்து உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்துள்ளதாகவும் அதனை வத்திக்கான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









