Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கையில் SME டிஜிட்டல் மாற்றத்திற்கான திறவுகோலாக SmartChat Mega 2026

மாசி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, தொழில்நுட்பம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இலங்கையில் SME டிஜிட்டல் மாற்றத்திற்கான திறவுகோலாக SmartChat Mega 2026

SLT-MOBITEL Enterprise விரிவாக்கத்தக்க டிஜிட்டல் தீர்வுகளினூடாக SMEகளுக்கு வலுவூட்டப்படுகிறது

தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வு வழங்குநர் எனும் வகையில், செயல்பாட்டுத் வினைத்திறன், போட்டித்திறன் மற்றும் வணிக வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் டிஜிட்டல் மற்றும் AI சார்ந்த தீர்வுகளை வழங்குவதன் ஊடாக, இலங்கை முழுவதுமுள்ள வணிகங்களை வலுப்படுத்துவதில் SLT-MOBITEL ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது. பல்வேறு இலக்கு சார்ந்த முன்முயற்சிகளின் ஊடாக, நிறுவனங்கள் தமது டிஜிட்டல் மாற்றப் பயணத்தை விரைவுபடுத்துவதற்கு SLT-MOBITEL தீவிரமாக ஒத்துழைக்கின்றது. ‘SmartChat Mega 2026’ என்பது குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்காக (SMEs) பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாகும். இது தனிப்பட்ட செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வணிகத் தீர்வுகளை நேருக்கு நேர் ஆலோசனைகளூடாக வழங்குகின்றது.

மேல் மாகாணத்தைச் சேர்ந்த 500 தெரிவு செய்யப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு, முழுமையான டிஜிட்டல் மாற்ற அனுபவத்தை வழங்கும் நோக்கில் ‘SmartChat Mega 2026’ நிகழ்வு 2026 பெப்ரவரி 19 ஆம் திகதி BMICH இல் நடைபெற்றது. இந்நிகழ்வு, பங்கேற்பாளர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் AI சார்ந்த தீர்வுகளை நேரடியாக அனுபவிக்கவும், SLT-MOBITEL இன் அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்களுடன் தனிப்பட்ட ஆலோசனைகளில் ஈடுபடவும், தொழில்நுட்பம் சார்ந்த நவீன வேலை முறைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த தெளிவைப் பெறவும் வாய்ப்பளித்தது. நிபுணர்களின் நேரடி வழிகாட்டல்கள் ஊடாக, தமது வணிகங்களுக்கு மிகவும் பொருத்தமான தீர்வுகளை இனங்காண்பதற்கும், அதன் மூலம் வினைத்திறனை மேம்படுத்தி, நிலையான வளர்ச்சி மற்றும் அதிக இலாபமீட்டலை அடைவதற்கும் SME களுக்கு வழிவகை செய்யப்பட்டது.

‘SmartChat Mega 2026’ நிகழ்வு, விசேடமாக வடிவமைக்கப்பட்ட வணிகக் கருவிகளை (tailored business tools) முன்னிலைப்படுத்தும் 12 விறுவிறுப்பான காட்சிகூடங்களுடன் களைகட்டியிருந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் ‘AI Hub’ பகுதியில் வணிகங்களுக்கான AI தொழில்நுட்பங்களையும், ‘E-Commerce Hub’ பகுதியில் வணிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும், ‘SmartOps Hub’ பகுதியில் வணிகச் செயற்பாடுகளைச் சீரமைக்கும் முறைகளையும் கண்டறிந்தனர். ‘SmartSpace’ காட்சியறையானது ‘Internet of Things’ (IoT) மற்றும் smart office innovations ஆகியவற்றைக் கொண்டிருந்ததுடன், ‘CloudSuite’ ஊடாக scalable cloud solutions செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.

‘Secure Biz’ காட்சியறையில் பாதுகாப்புத் தீர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததுடன், ‘Connect Hub’ பகுதியில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான மென்பொருள் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன், ‘Biz TV’ பகுதியில் PEO TV ஊடாக பொழுதுபோக்கு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ‘ELV Zone’ பகுதியில் உட்கட்டமைப்புத் தேவைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்ட அதேவேளை, ‘Next-Edge Connectivity Hub’ மற்றும் புதிய தயாரிப்புகளின் கண்காட்சி ஊடாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு (SMEs) ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ‘Enterprise Mobility’ பகுதியில் கையடக்கத் தொலைத்தொடர்பாடல் பொதிகள் அறிமுகப்படுத்தப்பட்டமையுடன் இப்பயணம் நிறைவடைந்தது. இவ்வனைத்து மையங்களும் ஒன்றிணைந்து, SLT-MOBITEL Enterprise இன் தொழில்நுட்பமானது எவ்வாறு ஒரு வணிகத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது என்பதையும், நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை சீரமைக்கவும், வினைத்திறனை அதிகரிக்கவும் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி புத்தாக்கத் தீர்வுகளைக் கையாளுவதற்கும் எவ்வாறு வலுவூட்டுகின்றது என்பதையும் ஒரு துடிப்புமிக்க காட்சிக்கூடமாகப் பிரதிபலித்தன.

நிபுணத்துவ ஆலோசனை மற்றும் end-to-end சேவை வழங்கல்களின் துணையுடன், உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தீர்வுகளை வழங்கி, இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களை வலுப்படுத்துவதற்கான SLT-MOBITEL Enterprise இன் அர்ப்பணிப்பை ‘SmartChat Mega 2026’ மீள உறுதிப்படுத்தியுள்ளது. ஒரே கூரையின் கீழ் விரிவான தொழில்நுட்பக் கட்டமைப்புகளை வழங்குவதன் ஊடாக, உற்பத்தித்திறன், பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் போட்டித்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சூழலமைப்புகளை உருவாக்குவதற்கு SLT-MOBITEL Enterprise இத்தொழில்முயற்சியாளர்களுக்கு வழிகோலுகின்றது.

SLT-MOBITEL Enterprise, இப்புத்தாக்கத் தளங்களை ஆராய்ந்து, தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களினூடாகத் திறன்மிக்க, அதிக மீள்திறன் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான வணிகங்களை உருவாக்குவதை நோக்கி அடுத்தகட்டத்தை எட்டுமாறு நாடு முழுவதுமுள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

முந்தைய செய்தி

முக்கிய வழக்கிலிருந்து யோஷித ராஜபக்சவின் பாட்டி விடுதலை

அடுத்த செய்தி

பரிசுத்தப் பாப்பரசர் 14 ம் லியோ இலங்கை வருவாரா?

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
அடுத்த செய்தி
500 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வு

பரிசுத்தப் பாப்பரசர் 14 ம் லியோ இலங்கை வருவாரா?

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.