கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகளுக்கும், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கச்செய்யும் செயற்பாடுகளை தடை செய்வதற்கும் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் முடிவெடுத்திருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் அழகாபுரி நன்னீர் கடற்றொழிலாளர் சங்க கட்டடத்தினை திறந்து வைத்த உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இயற்கைக்கு ஆபத்தானது. கடலுக்கும் ஆபத்தானது. அத்துடன் சிறுகடற் தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அரசாங்கம் குறித்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. றோலர்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கடற்றொழிலில் செயற்பாடுகளை தடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்திய இழுவை படகுகளாலும் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றன. இந்த கடல் எங்களுக்கு சொந்தமானதல்ல. எங்கள் எதிர்கால சந்ததிக்கு சொந்தமானது. ஆகவே இந்த கடலை பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதாக









