Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தபால் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

மாசி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
தபால் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான தபால் கட்டணத் திருத்தத்தின் கீழ் பல சேவைகளுக்கான விலைகள் மாற்றப்பட்டுள்ளன.

குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடிதங்கள் மற்றும் பதிவுத் தபால்
• சாதாரண கடிதங்கள்: 
இதுவரை 20 கிராம் ஆக குறிப்பிடப்பட்ட கடிதங்களுக்கான அடிப்படை நிறை வகுப்பு தற்போது 30 கிராம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கட்டணம் 70 ரூபா ஆகும்.
• பதிவுத் தபால் (Registration): கடிதங்களைப் பதிவு செய்வதற்கான மேலதிக கட்டணம் 60 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ரூ. 60 + 70)
• அரச சேவைகள்: அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்களினால் அனுப்பப்படும் பதிவுத் தபால் கடிதங்களுக்கு (30 கிராம் வரை) ரூ. 130
• கொழும்பு நகர எல்லை: கொழும்பு 1 முதல் 15 வரையான நகர வலயங்களுக்குள் மத்திய தபால் பரிமாற்றகத்தினூடாக விநியோகிக்கப்படும் கடிதங்களுக்கு (30 கிராம் வரை) 50 ரூபா விசேட கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏனைய தபால் சேவைகள்
• தபால் அட்டை (Postcard): 
ஒரு தபால் அட்டையின் புதிய கட்டணம் ரூ. 40 ஆகும்.
• தபால் அடையாள அட்டை: தபால் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான சாதாரண கட்டணம் ரூ. 50 ஆகவும், ஒருநாள் சேவைக்கான கட்டணம் ரூ. 200 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
• பொதி மற்றும் கூரியர்: 250 கிராம் வரையிலான சாதாரண பொதிகளுக்கு ரூ. 150, ‘SL Post Courier’ சேவை ஊடாக அனுப்பப்படும் அதே எடையுள்ள பொதிகளுக்கு ரூ. 200 அறவிடப்படும்.
• அச்சுப் பொருட்கள்: 30 கிராம் வரையிலான அச்சுப் பொருட்கள் அல்லது திறந்த பொதிகளுக்கு ரூ. 45 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
• பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள்: தபால் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளைத் தபாலில் அனுப்புவதற்கு (60 கிராம் வரை) ரூ. 40 அறவிடப்படும்.

பணம் மற்றும் தந்தி சேவைகள்
• தந்தி (Telemail): தந்தி சேவைக்கான ஆரம்பக் கட்டணம் (முதல் 10 சொற்களுக்கு) ரூ. 50 ஆகவும், மேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ரூ. 5 அறவிடப்படும்.
• பண அனுப்பல் கட்டணம் (Money Orders): தபால் நிலையங்கள் ஊடாக அனுப்பப்படும் பண விநியோகங்களுக்கான (PMT) தரகுப் பணம் (Commission) அதன் பெறுமதிக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ. 2,000 வரையான பணத்திற்கு ஒவ்வொரு ரூ. 100 இற்கும் ரூ. 2 வீதம் அறவிடப்படும்.

அனைத்து தபால் நிலையங்களும் இந்தப் புதிய கட்டண முறைக்கேற்ப செயற்படுமாறும், பொதுமக்கள் இது குறித்துத் தெளிவுபெறுமாறும் அனைத்து தபால் நிலையங்கள் உள்ளிட்ட தபால் திணைக்களத்தின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் சுற்றுநிருபம் மூலம் தபால் மாஅதிபர் எஸ்.ஆர்.டப்ளியூ.எம்.ஆர்.பீ. சத்குமாரவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

இலங்கைப் போக்குவரத்து சபையில் இணைந்த புதிய பெண் நடத்துனர்கள்

அடுத்த செய்தி

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிக்க புதிய நடவடிக்கை

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
மதுவரி வருமான சேகரிப்பை  அதிகரிக்க புதிய நடவடிக்கை

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிக்க புதிய நடவடிக்கை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.