இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பெண் நடத்துனர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த 20 பெண் நடத்துனர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.









