முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையானார்.
சிரிலிய சவிய வேலைத்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்சவை கடந்த 27 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் தம்மால் வருகை தர முடியாது எனவும்இ அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் ஷிரந்தி ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
அதற்கமைய ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் அவர் முன்னிலையானார். தொடர்ந்து 4 மணித்தியால விசாரணைகளின் பின்னர் ஷிரந்தி ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறியுள்ளார்.









