அமெரிக்கா ஈரானை நோக்கி போர் கப்பல்களை அனுப்பியுள்ள நிலையில், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிராக உடனடி பதிலடியை வழங்க தயாராகவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கடி நிலை வலுப்பெற்று வரும் நிலையில், அமெரிக்கா ஈரானின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஈரானில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவை தெரிவித்திருந்ததோடு, போராட்டக்காரர்களை ஒடுக்கினால் ஈரான் கடும் விளைவுகளை எதிர்கொள்ளுமென எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் போர்க்கப்பல்கள் ஈரானை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ், அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு பதிலடி வழங்கப்படுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








