ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிக மோசமாக அமையுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் நிலை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க போர்க்கப்பல்களை அமெரிக்கா மத்திய கிழக்கு நோக்கி அனுப்பிவைத்துள்ளது.
அமெரிக்காவின் பெரும் கடற்படை ஈரானை நோக்கிச் செல்வதாகவும், ஆபிரகாம் லிங்கன் எனும் விமானம் தாங்கி போர்க்கப்பல் குறித்த படைப்பிரிவை வழிநடத்தி பயணிப்பதாகவும், வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டதைவிட பெரும் படையாக இப்படை அமைந்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுவேலாவைப போன்று ஈரானும் விரைவில் உடன்படிக்கைக்கு வருமென நம்பிக்கையுள்ளதாகவும், அணு ஆயுதங்கள் இல்லை என்ற ஒப்பந்தத்தை நிறைவேற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட ஈரான் வருகைத் தருமெனவும் டொனால்ட் டிரம்ப தெரிவித்துள்ளார்.









