சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப் பொதிக்குள் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்து கடத்த முற்பட்ட நிலையில், விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருளை தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து இந்தியாவின் புதுடெல்லிக்கு கொண்டு வந்துள்ளார்.
அங்கிருந்து எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான யAI 277 என்ற விமானம் மூலம் இன்று காலை 07:33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரது பயணப் பொதிகளில் கார்பன் தாள்களினால் சுற்றப்பட்ட நிலையில், 07 கிலோகிராம் 70 கிராம் எடைகொண்ட குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.









