பண்டிகைக் காலத்தில் நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நாட்களில் நிலவும் அனர்த்த நிலைமையுடன் நீர்நிலைகளின் கட்டமைப்பு மாற்றமடைந்துள்ளது. அவற்றின் தரைப்பகுதி மற்றும் ஆழம் மாறுபட்டுள்ளது. எனவே இவ்வாறான இடங்களைப் பயன்படுத்தும் போது எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியாத நீர்நிலைகளில் இறங்கி நீராடவோ அல்லது அதனைப் பயன்படுத்தவோ முன்னதாக, அங்கிருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
சில வேளைகளில் பழைய இடங்களாக இருந்தாலும், அனர்த்தங்களுக்குப் பிறகு அவற்றின் ஆழம் அதிகரித்திருக்கக்கூடும்.
எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அத்துடன் தமது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.









