சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசம்பர் 22 திங்கட் கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 26 வெள்ளிக் கிழமையுடனும் நிறைவடைகின்றன.
அதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 கல்வியாண்டின் முதலாம் தவணையின் முதலாம் கட்டத்திற்காக அனைத்து பாடசாலைகளும் 2026 ஜனவரி 05 திங்கட்கிழமை அன்று ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 2026 கல்வியாண்டின் முதலாம் தவணை 2025.12.09 கடிதத்திறகமைவாக நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும் 2026 ஆண்டிற்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் 2025.09.11 திகதியிடப்பட்ட சமஇலக்க 30ஃ2025 தவணைகள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் ,பரீட்சை திணைகளத்தால் 2026 சுற்றுநிருபத்திற்கமைய பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பரீட்சை நடாத்தப்படும் தினங்களில் மாற்றங்கள் இல்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.









