2026 ம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நெப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ம் ஆண்டு முதல் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவிகளை இலக்காகக் கொண்டு தேசிய திட்டமாக கல்வியமைச்சினால் பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நெப்கின்களை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திட்டத்தை அடுத்த வருடம் முதல் விரிவாக முன்னெடுத்து செல்ல எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
6 ம் தரத்திற்கு மேல் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளை இலக்காகக் கொண்டு, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளிலும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. திட்டத்திற்கென அரசாங்கம் 44 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
சுகாதாரத் தரங்களை உறுதி செய்வதற்காக, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பாடசாலைகளுக்கு சுகாதார நெப்கின்கள் விநியோகிக்கப்படும்.
மாணவிகள் தங்கள் விருப்பத்தேர்வுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சுகாதார நெப்கின்களை வாங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குதல்இ பகுதிகளில் உள்ள புவியியல் வேறுபாடுகளின் அடிப்படையில் வவுச்சர் மற்றும் சுகாதார நெப்கின் விநியோக முறைகளைத் தயாரித்தல், பாடசாலைகளில் பயன்பாட்டிற்குப் பிறகு சுகாதார நெப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையை செயல்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.









