காலாவதியான தேயிலைப் பொதியை நுகர்வோருக்கு விற்பனை செய்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.200,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
அதிகாரசபையின் விசாரணையில், 15.07.2026 அன்று காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட 400 கிராம் தேயிலைப் பொதி ஒன்று ரூ.1,000க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1875/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் கட்டளை இலக்கம் 52-ஐ மீறியமைக்காக நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கட்டளை இலக்கம் 52 இன் படி, காலாவதியான அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பொருட்களை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேர்த்தோ, அருகிலோ அல்லது அவற்றுக்கு மத்தியிலோ வைத்திருப்பது, சேமிப்பது அல்லது குவித்து வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.








