Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உலக சுகாதார அமைப்பிலிருந்து   இலங்கைக்கு உயரிய உத்தியோகபூர்வ பாராட்டுச் சான்றிதழ்

புரட்டாதி 9, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
உலக சுகாதார அமைப்பிலிருந்து   இலங்கைக்கு உயரிய உத்தியோகபூர்வ பாராட்டுச் சான்றிதழ்
மலேரியா மற்றும் தனுவாதம் (பிக்பஸ் – Tetanus) ஆகிய நோய்களை ஒழித்த நிலையை தொடர்ந்து 10 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பேணிப் பாதுகாத்தமைக்காக  சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரத் துறையில் இலங்கை அடைந்துள்ள இரண்டு சிறப்பான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், உலக சுகாதார அமைப்பினால் (WHO) இலங்கைக்கு விசேட உத்தியோகபூர்வ பாராட்டுச் சான்றிதழ் (Citation) வழங்கப்பட்டுள்ளது.
திமோர்-லெஸ்தேவின் டிலி நகரில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசியப் பிராந்தியக் குழுவின் 79ஆவது கூட்டத்தொடரின் போது, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸவிடம் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசியப் பிராந்திய அலுவலக பொறுப்பதிகாரி டாக்டர்ிலேஷ் புத்தா (Dr Nilesh Buddha) அவர்களின் கையொப்பத்துடன் கூடிய குறித்த சான்றிதழ், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அத்தானோம் கெப்ரேயேசஸ் (Dr. Tedros Adhanom Ghebreyesus) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
முக்கிய அங்கீகாரப் பகுதிகள்:
  • மலேரியாவிலிருந்து விடுபட்ட நாடாக 10 ஆண்டுகள் பூர்த்தியடைந்தமை.
  • தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தனுவாதத்தை (Maternal and Neonatal Tetanus – MNT) ஒழித்து 10 ஆண்டுகள் பூர்த்தியடைந்தமை.
மலேரியா ஒழிப்புச் சாதனை:
இலங்கை மலேரியா ஒழிக்கப்பட்ட ஒரு நாடாகும். உலக சுகாதார அமைப்பினால் கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை மலேரியாவற்ற நாடாக உத்தியோகபூர்வமாகச் சான்றிதளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்று வரை 10 வருட காலப்பகுதியில் நாட்டிற்குள் மலேரியா மீண்டும் நுழைவதையும் பரவுவதையும் வெற்றிகரமாகத் தடுத்து, அந்தச் சிறந்த நிலையைத் தொடர்ந்து பேணி வருவதற்காக இந்த உலகளாவிய பாராட்டு கிடைத்துள்ளது. மாலைத்தீவுகளுக்கு அடுத்தபடியாக தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் மலேரியாவை ஒழித்த இரண்டாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது.
தனுவாதம் ஒழிப்புச் சாதனை:
இலங்கை தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தனுவாதத்தை வெற்றிகரமாக ஒழித்துள்ளதுடன், கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அந்தச் சுகாதாரச் சாதனையைப் பாதுகாத்து வருகிறது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தனுவாதத் தடுப்பூசி (Tetanus Toxoid) வேலைத்திட்டமும் நாடு முழுவதும் மிகச் சிறந்த முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தச் சாதனைகள் வெறும் சுகாதார மைல்கற்கள் மட்டுமல்லாமல், இலங்கை மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்துள்ளன என உலக சுகாதார அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஊடகப் பிரிவு
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு
முந்தைய செய்தி

ரஷ்யாவில் பனிச்சரிவில் சிக்குண்ட மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

அடுத்த செய்தி

காலாவதியான தேயிலை விற்பனை! ரூ.2 இலட்சம் அபராதம்…

தொடர்புடைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்
அண்மைய செய்திகள்

ஹட்டனில் லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் காயம்

புரட்டாதி 26, 2026
உயர்தர பரீட்சை  பெறுபேறுகள்  வெளியீடு
அண்மைய செய்திகள்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
அடுத்த செய்தி
காலாவதியான தேயிலை விற்பனை!   ரூ.2 இலட்சம் அபராதம்…

காலாவதியான தேயிலை விற்பனை! ரூ.2 இலட்சம் அபராதம்…

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check