கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 420 கிலோ எடை கொண்ட ‘ஐஸ்’ எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட டவல்களைக் கொண்ட கொள்கலன் ஒன்றில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் கொழும்பு துறைமுகத்தில் இன்று திடீர்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 420 கிலோ எடை கொண்ட ‘ஐஸ்’ எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கொள்கலனிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களை அளவிடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









