எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையின் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை 3:20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கென காகித தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவுஇ இராணுவம்இ பொலிஸ்இ எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு ஆகியன இணைந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. கடும் போராட்டங்களுக்கு பின்னர் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காகித தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









