இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை பாராளுமன்ற வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்குச் சென்றுள்ளது.
விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வகையில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஆணைக்குழுவில் ஆஜராகத் தவறியதை அடுத்தே அதிகாரிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் ஆணைக்குழுவில் ஆஜராவதை பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்றே தட்டிக்கழிக்கவில்லை என அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் நீதிமன்றில் ஆஜராவதற்கு மற்றுமொரு திகதியை சட்டத்தரணிகள் கோரியிருந்ததாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.









