பதுளை – பண்டாரவளை, பூனாகலை – கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட நவோதயபுரம் புதிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
அது தொடர்பான நிகழ்வு பூனாகலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
புதிய வீட்டுத்திட்டத்தின் கீழ் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணியும், 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடும் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும், அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும் இந்தத் திட்டம் முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளது.
புதிய வீட்டுத்திட்டத்தின் கீழ் பூனாகலை, கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.








