நுவரெலியா பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கென விசேட அறையொன்று திறக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் தாய்மார்களின் சௌகரியத்திற்காக, பாலூட்டும் தாய்மார்களுக்காக பிரத்தியேக வசதிகளுடன் குறித்த அறை அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறையை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் தலைமையில் நடைபெற்றது.









