பாடசாலை விடுமுறை காலத்தில் குழந்தைகள் ஓய்வெடுக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் அவசியமான நேரம் தேவைப்படுவதால், பெற்றோரும் ஆசிரியர்களும் அவர்கள் மீது அதிகப்படியான கல்விச் சுமையைத் திணிக்கக் கூடாது எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண்கள், இளையோர் மற்றும் குழந்தைகள் வேலைவாய்ப்புச் சட்டம் தொடர்பான திருத்தச் சட்டம் மீதான பாராளுமன்ற இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
குழந்தைகளின் மனநலனுக்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் ஓய்வு அவசியம். அவர்களின் மனதுக்குச் சுதந்திரமும் ஓய்வும் தேவைப்படுகிறது.
எனவே விடுமுறை காலத்தில் குழந்தைகள் மீது அதிகப்படியான கல்வி அழுத்தங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பெற்றோரையும் ஆசிரியர்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.









