தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக வழங்கப்படும் 200 ரூபா தொகையை , 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் தோட்டங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இந்தக் கொடுப்பனவைப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.









