முறையற்ற முறையில் வெளிநாட்டுச் கடவுச்சீட்டைப் பெற்றமை தொடர்பில் குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சஷி வீரவங்சவை, முன்பிணை அடிப்படையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பை வாசிப்பதற்காக வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வழக்கினை மீண்டும் செப்டம்பர் 27 ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.









