நுவரெலியா-ஹட்டன், கொட்டக்கலை பகுதியில் நேற்று (02) இரவு முதல் பெய்த அடை மழையால் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கொட்டகலை லொக்கில் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன் பாதசாரிகள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தாழ்நிலப் பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியள்ளனர்.
தாழ்நிலப் பிரதேச வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மழையின் காரணமாக ஹட்டன் நுவரெலியா மற்றும் ஹட்டன் கொழும்பு போன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.








