பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பாணந்துரை தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், அருக்கு வழங்கப்பட்டிருந்த டி 56 ரக துப்பாக்கியை வைத்த அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.









