தற்போதைய சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதாகவும் அதன்காரணமாக குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
திறந்த சந்தைப் பொருளாதாரம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, சமூகத்திற்குள் நுகர்வுவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் ,அதன் மூலம் மக்கள் மத்தியில் செயற்கையான ஆசைகளை தூண்டப்பட்டு பணம் சம்பாதிப்பதே இன்றைய சமூகத்தை இயக்கும் பிரதான காரணியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சீதுவை பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திறந்த சந்தைப் பொருளாதாரமானது மக்கள் மத்தியில் இதற்கு முன்னர் இல்லாத எல்லையற்ற ஆசைகளையும் தேவைகளையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், சந்தையானது மக்களின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆசைகள் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே கட்டுப்படுத்தப்படுவதாகவும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.









