தலவத்துகொட பகுதியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் செயற்பட்ட 9 விடுதிகள் நேற்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
இதன்போது 34 பெண்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாலான மத்திய ஊழல் ஒழிப்பு படையினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









