Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

வைகாசி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில்  நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கான இழப்பீடு வழங்குதல், வர்த்தக நட்டஈடு வழங்குதல், வீடுகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராய்ந்த ஜனாதிபதி, மீள்குடியேற்றம் மற்றும் காணி அடையாளங்காணும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதேச செயலக மட்ட ரீதியாக தனித்தனியாகக் கேட்டறிந்தார்.
டித்வா சூறாவளி காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா, நோர்வூட், நில்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, தலவாக்கலை, வலப்பனை, மதுரட்ட, ஹங்குரங்கெத்த மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய 10 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 18,266 குடும்பங்களைச் சேர்ந்த 61,833 நபர்கள் பாதிக்கப்பட்டதுடன், இதில் தோட்டப்பகுதிகளில் 675 வீடுகளும், கிராமப்புறங்களில் 1,565 வீடுகளும் முழுமையாக சேதமடைந்ததுடன், தோட்டப்பகுதிகளில் 612 வீடுகளும் கிராமப்புறங்களில் 153 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்தன. அத்துடன் 93 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இங்கு விரிவாக ஆராய்ந்தார்.
வீடுகளை இழந்து கூடாரங்களில் வசிக்கும் தோட்ட மக்கள், தற்போதுள்ள மழைக்காலத்துடன் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அவர்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதற்கான காணி ஒதுக்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்துமாறும், அந்தக் காணிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படும் வரை, அவ்விடத்திலேயே தற்காலிக வீடொன்றை விரைவாக அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கினார்.
அண்மைய காலத்தில் ஏற்பட்ட மிகப்பாரிய பேரழிவான டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் காணப்பட்ட போதிலும், முறையான திட்டமிடல் மற்றும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாக அவற்றைத் வெற்றிகரமாகக் கடந்து, முதற்கட்டப் பணிகளில் கணிசமான பகுதியை முடிக்க முடிந்ததாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
இதன் உண்மையான பலன்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமாயின், இந்தச் செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்றும், எனவே மீள்குடியேற்றம் உள்ளிட்ட இரண்டாம் கட்டப் பணிகளையும் மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முடிப்பதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் ஏற்பட்டதைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் நாட்டில் ஏற்படாதவாறு, நாட்டின் பொருளாதாரத்தைக் கையாளும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும், அங்கு வலுவான நிதி ஒழுக்கத்துடன் முக்கியமான அளவுகோல்களின் படி செயற்பட வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, அதன் பலன்களை விரைவாக மக்களுக்கு வழங்க அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
முந்தைய செய்தி

சீரற்ற வானிலையால் ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுப்போட்டிகள்

அடுத்த செய்தி

சீரற்ற காலநிலை 8 மாவட்டங்களில் பாதிப்பு 2 மரணங்கள் பதிவு

தொடர்புடைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
சீரற்ற காலநிலை 8 மாவட்டங்களில் பாதிப்பு  2 மரணங்கள் பதிவு

சீரற்ற காலநிலை 8 மாவட்டங்களில் பாதிப்பு 2 மரணங்கள் பதிவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check