நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் , இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன
கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர், ‘B’ பிரிவின் T20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஆளுநர் கிண்ணத் தொடர் ஆகியனவும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மழையுடனான காலநிலை சீரடைந்த பின்னர், திருத்தப்பட்ட போட்டி அட்டவணைகள் அறிவிக்கப்படும் என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக ஏற்கனவே நடத்த திட்டமிடப்பட்டிருந்த தடகள தெரிவுப் போட்டிகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தடகள சங்கம் அறிவித்துள்ளது.









