Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மலையக மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் – பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

வைகாசி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
மலையக மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் – பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மலையக மக்கள் பாதுகாக்கப்படுவார்கள், அவர்களுக்கான உரிமைகளும் பெற்றுக் கொடுக்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மையில் காவத்தை நீலகாமம் தோட்டத்தில் தற்காலிக குடியிருப்பு ஒன்று உடைக்கப்பட்டு தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் நேற்று சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்த அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்படுவதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மலையக மக்கள் காலங்காலமாக உறிஞ்சப்பட்டு தொடர்ச்சியாக அவர்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுபோன்றே அண்மையில் காவத்தை பிரதேசத்தில் நீலகாமம் தோட்டத்தில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொழிலாளி ஒருவர் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக தோட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில் அது கிடைக்காத பட்சத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடம் ஒன்றில் அவர் குடிசை ஒன்றை கட்டியிருந்தார்.

இதன்போது மேற்படி தோட்ட நிர்வாகம் சட்ட ரீதியில் பொலிஸ் மூலமாக நடவடிக்கை எடுக்காமல், அவர்களிடமுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவைக் கொண்டு கட்டப்பட்டிருந்த அந்த குடிசை வீட்டின் மீது தாக்குதலை நடத்தி அங்குள்ள தொழிலாளர்கள் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவத்தை கேள்விப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாம் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இவ்வாறான நடவடிக்கைகள் இன்று நேற்றல்ல. தொடர்ச்சியாக மலையக பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றன என்பதை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

குறிப்பாக கேகாலை, நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற பல்வேறு பகுதிகளிலும் தொழிலாளர்கள் தமக்கான குடியிருப்பு ஒன்றை நிர்மாணிக்கும் போதும் மலசல கூடம் ஒன்றை அமைக்கும்போதும் கூட தொடர்ச்சியாக அந்த மக்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.

இதுவரை காலமும் இதுபோன்ற சம்பவங்கள் மலையகப் பகுதியில் நடக்கும் போது அங்குள்ள அரசியல் தலைவர்கள் நேரடியாக அங்கு சென்று கண்காட்சியையே நடத்துவார்கள். ஆனால் இந்தமுறை இரத்தினபுரி பகுதி சம்பவம் நடைபெற்று 8 மணித்தியாலங்களுக்குள் நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். 9 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

நாம் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்தோம். அவர்களுக்கான காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையே அந்த மக்கள் முன்வைக்கின்றனர் என்றும்பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி

இலங்கையில் முதலீட்டாளர்களான சாதகமான சூழல்

அடுத்த செய்தி

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கப்பு

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
வழமைக்கு திரும்பும் லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் விநியோகம்

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check