பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று முதல் லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் விநியோகம் எந்தவிதப் தடையுமின்றி முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
7,000 மெட்ரிக் டொன் லாப்ஸ் எரிவாயுவை ஏற்றிச் வந்த கப்பல் ஒன்று கடந்த 6 ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக லாப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்று முதல் லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









