இலங்கை முழுவதும் உணவகங்களில் விற்கப்படும் சில உணவுப் பொருட்களின் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கப்பட்டுள்ள விலைகள்
உணவுப்பொதி (Rice packets) – ரூ. 30 அதிகரிப்பு
ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து (Fried Rice & Kottu) – ரூ. 30 அதிகரிப்பு.
சிற்றுண்டிகள் (Short Eats) – ரூ. 10 அதிகரிப்பு.
பரோட்டா மற்றும் முட்டை ரொட்டி (Parata & Egg Rotti) – ரூ. 10 அதிகரிப்பு.
பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் (Milk Tea & Plain Tea) – ரூ. 5 அதிகரிப்பு.
உணவுப் பொருட்களின் மூலப்பொருள் விலைகள் அதிகரிப்பு, போக்குவரத்து செலவுகள் மற்றும் ஏனைய செயற்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளமையே விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிடுகிறது.









