ஹோர்மூஸ் கடல்வழிப்பாதையை கடந்து செல்ல 5 நட்பு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
அதற்கமைய இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹோர்மூஸ் கடல்வழிப்பாதை எதிரி நாடுகளுக்கும், அவர்களின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஹோர்மூஸ் கடல்வழிப்பாதையை மீண்டும் திறக்க வேண்டுமென ஐ.நா பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









