பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி இடம்பெறுமென பிரதி கல்வியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு முன்னதாக சுமார் நான்கு பாடசாலை நாட்கள் இழக்கப்பட்ட போதிலும்இ அது பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வித்துறையானது தேசிய சக்திக் கொள்கைகளுக்கு ஏற்ப தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும்இ தற்போதைய சூழல் பரீட்சைகளைத் தாமதப்படுத்தும் அளவுக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய நிலவரப்படிஇ ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பரீட்சை அட்டவணைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என பிரதி கல்வியமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்படும். தற்போதைக்கு பழைய திட்டமே நடைமுறையில் இருக்குமென பிரதி கல்வியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.








