நாட்டில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை மறுசீரமைத்துள்ளது.
அதற்கமைய 303 ரூபாவாகவிருந்த லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 382 ரூபாவாகும்.
353 ரூபாவாகவிருந்த சூப்பர் டீசலின் விலை லீட்டருக்கு 90 ரூபா அதிகரித்துள்ள நிலையில் , புதிய விலை 443 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
317 ரூபாவாகவிருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 398 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட் 95 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 455 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 255 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.









