ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரானின் மிகப்பெரிய மின்நிலையங்கனை தாக்கி அழிக்கவுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க – ஈரான் யுத்தம் ஆரம்பித்து 22 நாட்கள் கடந்துள்ளன. தாக்குதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உச்சத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் ஹோர்மூஸ் நீரிணையை எவ்வித அச்சுறுத்தலுமின்றி முழுமையாக திறக்காவிட்டால் , ஈரானின் பல்வேறு மின் நிலையங்கள் தாக்கி அழிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு விதித்த தடையை நீக்குமாறு ஈரானுக்கு 22 நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பிற நாடுகள், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. பாதுகாப்பான பயணம் சர்வதேச சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.









