ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அமெரிக்காவுக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து , ஜப்பான் பிரதமர் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம் , பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நாடுகளுக்குமிடையிலான முதலீடுகளை வலுப்படுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.









