அமெரிக்காவில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் 1920ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜோன்ஸ் சட்டத்தில் தளர்வுகளை கொண்டுவந்துள்ளது.
குறித்த சட்டத்தின்படி, அமெரிக்கத் துறைமுகங்களுக்கு இடையே பொருட்களை ஏற்றிச் செல்ல அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, அமெரிக்கக் கொடியுடன் கூடிய மற்றும் அமெரிக்கர்களால் இயக்கப்படும் கப்பல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற சட்ட நடைமுறை காணப்பட்டது.
குறித்த சட்டம் எதிர்வரும் 60 நாட்களுக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கெரோலின் லேவிட் (Karoline Leavitt) குறிப்பிட்டுள்ளார்.









