ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர், மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும் யுத்த சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமை மற்றும் தேவையான சேவைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திட்டமிட்டப்பட்டிருந்த தொடரை ஆண்டின் இறுதிப் காலாண்டில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட T 20 சார்ஜாவில் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.









