கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
நாளை முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை முதல் கட்ட பரிட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 10ம் திகதி வரை நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பிரயோக பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.









